செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மக்கள் ஆர்வமற்று வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு | எகிப்து பாராளுமன்ற தேர்தல்மக்கள் ஆர்வமற்று வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு | எகிப்து பாராளுமன்ற தேர்தல்

மக்கள் ஆர்வமற்று வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு | எகிப்து பாராளுமன்ற தேர்தல்மக்கள் ஆர்வமற்று வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு | எகிப்து பாராளுமன்ற தேர்தல்

1 minutes read

எகிப்து அதிபராக இருந்து வந்த முகமது மோர்சியை ராணுவ தளபதி அப்தெல் பட்டா அல் சிசி 2013-ம் ஆண்டு அகற்றினார். அதைத் தொடர்ந்து ஒரு இடைக்கால அரசை ஏற்படுத்தினார்.

பின்னர் 2014-ம் ஆண்டு அல் சிசி, அதிபர் பதவிக்கு வந்தார். பாராளுமன்றத்துக்கு முறைப்படி தேர்தல் நடத்தப்படும் என அவர் வாக்குறுதி அளித்ததால் எதிர்க்கட்சிகள் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டின.

இந்த நிலையில் பல முறை ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை தொடங்கியது. தேர்தலில் எதிர்கட்சிகள் இல்லாமல், கண்துடைப்புக்காக நடத்தப்படும் இந்த தேர்தலில் மக்கள் ஆர்வமற்று வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் ஓட்டைப் பதிவு செய்தனர்.

இதனால் முதல் நாளில் 15 முதல் 16 சதவீத ஓட்டுபதிவு நடந்த நிலையில், ஞாயிற்றுகிழமை வெறும் 10 வாக்குகள் மட்டுமே பதிவானதாக அங்கு செய்தி சேகரித்துவரும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வாக்குபதிவை அதிகரிக்கும் வகையில் திங்கள் கிழமை அலுவலகங்களுக்கு அரைநாள் விடுப்பு அளிக்கப்பட்டது. ஆனால் திங்கள் கிழமை நடைப்பெற்ற வாக்கு பதிவு சதவீதம் பற்றி விபரம் இன்னும் வெளியாகவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.