இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச நிபுணர்கள் அடங்கிய குழு உள்நாட்டிலேயே விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் தீர்மானம் நிறைவேற்றியது. இதுகுறித்து இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே
ஐ.நா. மனித உரிமை ஆணைய தீர்மானம் குறித்து பல்வேறு விளக்கங்களை பலரும் கூறிவருகிறார்கள். ஆனால் இது நாட்டுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல் என்பதே உண்மை. விடுதலைப் புலிகளுடனான போரை நிறுத்தும்படி நம்மை வலியுறுத்திய நாடுகளே இந்த தீர்மானத்தின் பின்னணியில் உள்ளன. தற்போதைய அரசு இதை ஏற்றுக்கொள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தீர்மானத்தில் பல பத்திகள் ஆபத்தானது, அதிலும் 3 பத்திகள் மிகவும் ஆபத்தானதும், ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும். சுயமரியாதை உள்ள யாரும் இதை ஏற்கமாட்டார்கள். நமது அரசியல் சட்டத்தை இவ்வாறு மாற்றினால் அது நமது போர் வீரர்களை தண்டிப்பதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.