செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தவறுதலாக பாகிஸ்தானுக்கு சென்றபெண் கீதா தாயகம் திரும்புகிறார்.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தவறுதலாக பாகிஸ்தானுக்கு சென்றபெண் கீதா தாயகம் திரும்புகிறார்

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தவறுதலாக பாகிஸ்தானுக்கு சென்றபெண் கீதா தாயகம் திரும்புகிறார்.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தவறுதலாக பாகிஸ்தானுக்கு சென்றபெண் கீதா தாயகம் திரும்புகிறார்

1 minutes read

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தவறுதலாக பாகிஸ்தானுக்கு சென்ற வாய் பேச முடியாத, காது கேளாத இந்தியப் பெண் கீதா திங்கள்கிழமை (அக்.26) தாயகம் திரும்புகிறார்.
கீதாவுக்கு 7 அல்லது 8 வயது இருக்கும்போது லாகூர் ரயில் நிலையத்தில் சம்ஜௌதா விரைவு ரயிலில் இருந்து பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்களால் கண்டெடுக்கப்பட்டார்.
பிறகு, எதி எனும் தனியார் அமைப்பு அவரை தத்தெடுத்துக் கொண்டது. இந்த விஷயம் இந்திய அரசுக்கு தெரியவந்த பின்னர், அவரை மீட்கும் நடவடிக்கையை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மேற்கொண்டார்.
இதுகுறித்து எதி அமைப்பின் நிறுவனர் ஃபஹத் எதி பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கீதாவை எங்கள் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே பார்க்கிறோம். ஆனால், அவர் இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார். கீதாவின் குடும்பத்தினரின் புகைப்படங்களை இந்தியத் தூதரகம் அனுப்பி வைத்தது. அதில் ஒரு புகைப்படத்தில் உள்ளவர்களை தனது பெற்றோர் என்று கீதா அடையாளம் காட்டினார்.
எனினும், மரபணுச் சோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள்தான் உண்மையான பெற்றோர் என்று நிரூபிக்கப்படும் வரை அவருடன் நாங்கள் இருப்போம். இதற்கு, இந்திய அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, எங்களது குடும்பத்தினருடன் கீதாவை அழைத்துக்கொண்டு திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் தில்லி செல்லும் விமானத்தில் புறப்படுகிறோம் என்றார் ஃபஹத் எதி.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.