பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நேற்று இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது உண்ணாவிரதம் இருந்த கைதிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்வது சாத்தியமில்லை என ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து விட்டதாக தேசிய பேச்சுவார்த்தை குழு மந்திரியான மனோ கணேசன் இன்று தெரிவித்துள்ளார்.
எனினும், போலீஸ்துறை சார்ந்த வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறைகளில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை ஜாமினில் விடுவிப்பது தொடர்பான நடைமுறைகளை விரைவுப்படுத்துமாறு அதிகாரிகளை பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.