செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கப் போர்க் கப்பல்தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கப் போர்க் கப்பல்

தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கப் போர்க் கப்பல்தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கப் போர்க் கப்பல்

1 minutes read

தென் சீனக் கடல் பகுதியிலுள்ள சர்ச்சைக்குரிய தீவுக்கு அருகே தங்களது போர்க் கப்பல் ரோந்து சென்றதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தென் சீனக் கடல் பகுதியில் உள்ள சுபி தீவுக்கு சீனா, பிலிப்பின்ஸ், வியத்நாம் ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன.
சர்ச்சைக்குரிய அந்தத் தீவை ஆக்கிரமித்துள்ள சீனா, அந்தப் பகுதியில் எந்த நாட்டுக் கப்பலையும் அனுமதிக்க மாட்டோம் என கடந்த வாரம் அறிவித்தது.
இந்த நிலையில் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ். லாஸன் போர்க் கப்பல், தென் சீனக் கடலில் ரோந்துப் பணி மேற்கொண்டபோது சுபி தீவுக்கு 22 கி.மீ. தொலைவு வரை வந்து சென்றதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறியதாவது:
அமெரிக்கப் போர்க் கப்பல்கள் சர்வதேச சட்டங்களுக்கு உள்பட்டு உலகின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ரோந்துப் பணியில் ஈடுபடும். குறிப்பாக, கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்புடைய வர்த்தகப் பொருள்களை ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல்களின் போக்குவரத்து நிறைந்த தென் சீனக் கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய, அந்தப் பகுதியில் ரோந்துப் பணி மிகவும் அவசியமாகும் என்றார் அவர்.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “”இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவதற்கு முன்னர் அமெரிக்கா நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்துவதை அந்த நாடு தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.