செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 25 ஆண்டுகளில் இங்கிலாந்து மக்கள் தொகை மேலும் 1 கோடி உயரும்25 ஆண்டுகளில் இங்கிலாந்து மக்கள் தொகை மேலும் 1 கோடி உயரும்

25 ஆண்டுகளில் இங்கிலாந்து மக்கள் தொகை மேலும் 1 கோடி உயரும்25 ஆண்டுகளில் இங்கிலாந்து மக்கள் தொகை மேலும் 1 கோடி உயரும்

1 minutes read

’25 ஆண்டுகளில் இங்கிலாந்து மக்கள் தொகை மேலும் 1 கோடி உயரும்’ என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தின் தேசிய புள்ளியியல் துறை எதிர் காலத்தில் இங்கிலாந்தின் மக்கள் தொகை வளர்ச்சி குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தியது.

அதில், இன்னும் 25 ஆண்டுகளில் அதாவது 2039–ம் ஆண்டில் இங்கிலாந்தின் மக்கள் தொகைவிட மேலும் 1 கோடி உயரும். அதாவது 2014–ம் ஆண்டில் இங்கிலாந்தின் மக்கள் தொகை 6 கோடியே 46 லட்சமாக இருந்தது.

அது 2039–ம் ஆண்டில் 7 கோடியே 43 லட்சமாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதே வேளையில் இன்னும் 10 ஆண்டுகளில் (2024) 44 லட்சம் மக்கள் தொகை அதிகரிக்கும் என புள்ளியியல் ஆய்வு தெரிவிக்கிறது.

அதிக அளவில் வெளிநாட்டினர் இங்கிலாந்தில் குடியேறுவதே மக்கள் தொகை பெருக்கத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதன் மூலம் மக்கள் தொகை பெருக்கத்தில் 2030–ம் ஆண்டில் பிரான்சையும், 2047–ம் ஆண்டில் ஜெர்மனியையும் இங்கிலாந்து முந்தும் என கணக்கிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.