அமெரிக்காவில் சிறை கைதிகள் மற்றும் கண்காணிப்பில் உள்ள குற்றவாளிகளுக்காக 80 பில்லியன் அமெரிக்கன் டாலர் ஆண்டுதோறும் செலவிடப்படுவதாகவும், இதனை சரிசெய்ய குற்றவியல் நீதி ஒழுங்கு முறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று அதிபர் பராக் ஓபாமா தெரிவித்துள்ளார்.
சாதாரண குற்றங்களை புரிந்தவர்கள் அதிக தண்டனை அனுபவிக்காத வகையிலும், சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சீர்திருத்தம் அமையும் என்றும் ஓபாமா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அமெரிக்க வானொலியில் அவர் பேசியதாவது:-
”அமெரிக்காவில் தற்போது 22 லட்சம் மக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பரோலிலோ அல்லது மேற்கண்காணிப்பிலோ வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக ஆண்டு தோறும் 80 பில்லியன் அமெரிக்கன் டாலர் நாம் வரியில் இருந்து செலவிடுகிறோம்.
சாதாரண குற்றங்களை செய்தவர்கள் அதிக அளவில் தண்டனை பெறும் சூழ்நிலை நிலவுகிறது. சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு வேலை கிடைப்பது சிரமமாக உள்ளது என்றும் ஓபாமா வலியுறுத்தியுள்ளார்.