செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ராஜபக்சே தலைமையிலான எதிர்ப்பு அணியினர் விரைவில் போராட்டம்ராஜபக்சே தலைமையிலான எதிர்ப்பு அணியினர் விரைவில் போராட்டம்

ராஜபக்சே தலைமையிலான எதிர்ப்பு அணியினர் விரைவில் போராட்டம்ராஜபக்சே தலைமையிலான எதிர்ப்பு அணியினர் விரைவில் போராட்டம்

1 minutes read

இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார் கூறப்பட்டது. அது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில், சர்வதேச கண்காணிப்புடன் கூடிய உள்நாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதை இலங்கை அரசு வரவேற்றுள்ளது.

ஆனால் இதை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் முன் வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி ராஜபக்சே தலைமையிலான எதிர்ப்பு அணியினர் விரைவில் போராட்டம் நடத்த உள்ளனர். அதற்கான தீர்மானம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி முதற்கட்ட எதிர்ப்பு போராட்டம் இம்மாதத்தில் மாதத்தறையில் நடக்கிறது. இரண்டாம் கட்ட நடவடிக்கை கிழக்கு மாகாணத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நடைபெற உள்ள அனைத்து கட்சி மாநாட்டுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட உள்ளது. ராணுவத்தை காட்டிக் கொடுக்க ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என்றும் ராஜபக்சே அணியினர் கூறியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.