செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிரிட்டன் உளவுத் துறையில் 1,900 பேரை பணியமர்த்த பிரதமர் டேவிட் கேமரூன் முடிவுபிரிட்டன் உளவுத் துறையில் 1,900 பேரை பணியமர்த்த பிரதமர் டேவிட் கேமரூன் முடிவு

பிரிட்டன் உளவுத் துறையில் 1,900 பேரை பணியமர்த்த பிரதமர் டேவிட் கேமரூன் முடிவுபிரிட்டன் உளவுத் துறையில் 1,900 பேரை பணியமர்த்த பிரதமர் டேவிட் கேமரூன் முடிவு

1 minutes read

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, பிரிட்டன் உளவுத் துறையில் கூடுதலாக 1,900 பேரை பணியமர்த்தவிருப்பதாக அந்த நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார்.
துருக்கியில் நடைபெற்று வரும் ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக அந்த நாட்டின் அன்டாலியா நகருக்கு வந்துள்ள அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
கடந்த ஆறு மாதங்களில் பிரிட்டன் உளவு அமைப்புகள் 7 பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடித்துள்ளன.
இதுவரை தாக்குதல் சதித் திட்டங்கள் அல்-காய்தா பயங்கரவாதிகளால், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டுமே தீட்டப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாதிகளால் அதிகரித்துள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக எங்களது எம்.ஐ.5, எம்.ஐ.6, ஜி.சி.ஹெச்.க்யூ. ஆகிய உளவு அமைப்புகளில் கூடுதலாக 1,900 பேரை பணியமர்த்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார் அவர்.
தற்போது பிரிட்டன் உளவு அமைப்புகளில் சுமார் 12,700 பேர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.