இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் கால்பந்தாட்ட வீரரான டேவிட் பெக்காமுக்கு இந்த ஆண்டுக்கான ‘உலகின் கவர்ச்சியான ஆண்’ என்ற பட்டத்தை அமெரிக்க வார இதழான ‘பீப்புல்’ அறிவித்துள்ளது.
பீப்புல் வார இதழ் அளித்துள்ள இந்த மாபெரும் கவுரவத்துக்கு நன்றி தெரிவித்துள்ள டேவிட் பெக்காம், அறுபது வயதில் தனது தோற்றம் எப்படியிருக்கும்? என்பதைப் பற்றி கவலையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது நாற்பது வயதாகும், டேவிட் பெக்காம் தனது உடலில் நாற்பதுக்கும் மேற்பட்ட டேட்டூக்களை குத்திக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த பட்டத்தை, சூப்பர்ஹீரோ கதையான ‘தோர்’ பட வரிசைகளில் நடித்துவந்த ஆஸ்திரேலிய நடிகரான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் கடந்த ஆண்டு வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.