செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்ற மிகவும் அசிங்கமான நபர் போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெற்ற மிகவும் அசிங்கமான நபர் போட்டி

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற மிகவும் அசிங்கமான நபர் போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெற்ற மிகவும் அசிங்கமான நபர் போட்டி

1 minutes read

தென் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான  ஜிம்பாப்வேயில் நடைபெற்ற, ‘மிகவும் அசிங்கமான நபர்’ போட்டியில்,இரண்டு ஆண்டுகளாக அந்த பட்டத்தை தக்க வைத்திருந்தவரை, தன், ‘அழகால்’ வீழ்த்தி, பட்டத்தை வென்றார் மைசன் செரெ, 42, என்பவர்.
வழக்கமாக, அழகிப் போட்டிகளையும், ஆணழகர்கள் போட்டியையும் பார்த்து ரசித்துள்ளவர்களுக்கு, ஜிம்பாப்வே நாட்டில் நடத்தப்பட்ட அசிங்கமான நபர் போட்டி மிகவும் வித்தியாசமாக இருந்தது. ‘பார்த்தவுடன் அந்த நபரை வெறுக்கும் அளவுக்கும்; கண்களை மூடிக் கொள்ளும் அளவுக்கும் அவர் இருக்க வேண்டும்’ என்பது தான், போட்டியின் முக்கிய விதி.கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தப்படும் இந்தப் போட்டியில், இரண்டு ஆண்டுகளாக அந்த பட்டத்தை தக்க வைத்திருந்தவர், வில்லியம் மஸ்வினு, 45. இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற, இந்த ஆண்டுக்கான, அசிங்கமான நபர் போட்டியில், மஸ்வினுவை வீழ்த்திவிட்டார் மைசன் செரெ.
மஸ்வினுவும், அவரின் ஆதரவாளர்களும், பட்டம் தங்கள் கைகளை விட்டு போவதை அனுமதிக்காமல், நடுவர்களிடம் கடைசி வரை போராடினர். ‘என்னைப் பார்த்தாலே அசிங்கமாக இருக்கும். ஆனால், மைசன் செரெ, பார்ப்பதற்கு அழகாக உள்ளான்; வாயைத் திறந்து சிரித்தால் தான் அசிங்கமாக இருப்பான்; எனவே, எனக்குத் தான் பட்டம் வேண்டும்’ என, மஸ்வினு மன்றாடினார்.
எனினும், போட்டியாளர்கள், ‘சிரித்த படி, சிரிக்காமல் என, எப்படிப் பார்த்தாலும், மைசன் செரெ தான் அசிங்கமாக இருக்கிறார். எனவே, அவருக்குத் தான் பட்டம்’ என்றனர். இதையடுத்து, ரகளையில் ஈடுபட்ட மஸ்வினு ஆதரவாளர்கள், ‘போட்டியில் முறைகேடு நடந்துள்ளது; எங்கள் ஆள் தான், மிகவும் அசிங்கமான ஆள்; அதனால் தான், இரண்டாண்டுகளாக அவர் இந்தப் போட்டியில் வென்று வந்தார்’ என, கூச்சலிட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.