மெக்சிகோவில் குயரெரோ மாகாணத்தில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜான் லூயிஸ் அகாட்லான் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் குலுங்கின
இந்த நிலநடுக்கம் தலைநகர் மெக்சிகோ சிட்டி, அகாபுல்கோ உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டது. அங்கும் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்து குலுங்கின.
இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். அகாபுல்கோ நகரம் சுற்றுலா தலமாகும்.
அங்கு அதிக அளவில் ஓட்டல்கள் உள்ளன. நிலநடுக்கம் காரணமாக அங்கு தங்கியிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். மெக்சிகோ சிட்டியிலும் வீடுகளில் தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இங்கு 2 கோடி மக்கள் வசிக்கின்றனர். மெக்சிகோ சிட்டி பழமை வாய்ந்த ஏரி படுகையில் அமைந்துள்ள நகரம். இதனால் அதன் பூமி மிகவும் மிருதுவாக உள்ளது. நிலநடுக்கத்தின் போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணுக்குள் புதையவும், இடியவும் வாய்ப்பு உள்ளது. எனவே, உயிர் சேதத்தை தடுக்க அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையே அங்கு 5.5 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் கட்டிட இடிபாடுகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.