0
தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தொற்றினால் இதுவரை இலங்கையில் 357 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட ரீதியாக ஒப்பிடும் இவ்வருடத்தில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு எயிட்ஸ் நோயினை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இதுவரை எமது நாட்டில் 380367 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
ஊடகவியலாளர்களை தெளிவுப்படுத்துவதன் மூலம் மக்களை தெளிவுப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இன்னும் எங்களுடன் சிகிச்சை உண்டு எனும் தொனிப்பொருளில் தேசிய எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள சுகாதார கல்வி பணியகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாலியல் தொடர்பான நோய்கள் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு தேசிய திட்டதின் பணிப்பாளரும் வைத்தியருமான சிசிர லியனகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.