செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வெளிநாடு செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் | அரசு எச்சரிக்கைவெளிநாடு செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் | அரசு எச்சரிக்கை

வெளிநாடு செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் | அரசு எச்சரிக்கைவெளிநாடு செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் | அரசு எச்சரிக்கை

1 minutes read

உலகெங்கிலும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நிகழ்த்தும் அச்சுறுத்தல் இருப்பதால் வெளிநாடு செல்லும் அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அந்த நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ்., அல்-காய்தா, போகோ ஹராம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நிகழ்த்துவதற்கான அச்சுறுத்தல் தொடர்வதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமான முறை மட்டுமின்றி, இதுவரை இல்லாத புதிய வழிமுறைகளையும் பின்பற்றி பயங்கரவாதிகள் அரசு மையங்கள் மீதும், தனியார் மையங்கள் மீதும் தாக்குதல் நிகழ்த்தக்கூடும்.
அதுமட்டுமின்றி, பயங்கரவாத அமைப்புகளுடன் நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும், அந்த அமைப்புகளின் சிந்தாந்தங்களால் கவரப்பட்ட சிலர், தனியாக தாக்குதல் நிகழ்த்தும் அபாயமும் உள்ளது.
விளையாட்டுப் போட்டிகள், காட்சியரங்குகள், திறந்தவெளிச் சந்தைகள், விமானங்கள் ஆகியவை பயங்கரவாதிகளின் இலக்காகக் கூடும்.
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் அமெரிக்கர்கள், இத்தகைய கூட்டம் நிறைந்த பகுதிகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
எப்போதும் சுற்றுப்புறத்தில் என்ன நிகழ்கிறது என்பதை விழிப்புணர்வுடன் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.
விடுமுறை நாட்களிலும், விழாக்களின்போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
ஊடகங்களையும், உள்ளூர் தகவல் மையங்களையும் தொடர்ந்து கவனித்து வந்து, நிலவரத்துக்கு ஏற்ப பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.