செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் இணைய வேண்டும் – இங்கிலாந்து பிரதமர்ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் இணைய வேண்டும் – இங்கிலாந்து பிரதமர்

ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் இணைய வேண்டும் – இங்கிலாந்து பிரதமர்ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் இணைய வேண்டும் – இங்கிலாந்து பிரதமர்

1 minutes read

ஐ.எஸ் தீவிரவாதிகளின் இஸ்லாமிய தேசம் மீது இங்கிலாந்து மீண்டும் வான்வெளி தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். இதற்காக இங்கிலாந்து மந்திரிகளை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார்.

பாரிஸ் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டத்தை அடுத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது கூட்டுத் தாக்குதல் நடத்த முக்கிய நாடுகளுக்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே இரு தினங்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். மேலும் ஒபாமா மற்றும் ஹாலண்டே இங்கிலாந்திற்கு தங்களை அழைப்பையும் விடுத்தனர்.

இந்நிலையில் தங்களது நட்பு நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் இணைய வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வலியுறுத்தியுள்ளார்.

”பாரிஸ் சம்பவத்தையடுத்து இந்த தாக்குதலுக்கு புதிய உடனடி தேவை உருவாகியுள்ளதாகவும், நாம் இந்த கூட்டு நடவடிக்கையில் இணையவில்லை என்றால் ‘இப்போது இல்லை என்றால் எப்போது’ என்று நமது நட்பு நாடுகள் கேள்வி எழுப்பும்” என்றும் அவர் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.