இரவில் ஒளிரும் லண்டன் நகரின் அழகை வெளிப்படுத்தும் விதமாக விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.
சிலந்தியின் வலையைப் போல, ஒளியின் இழைகள் லண்டன் நகரெங்கும் படர்ந்து கிடக்கின்றது. இந்தப் புகைப்படத்தில் லண்டன் நகரிலுள்ள பூங்காக்கள் இருண்ட புள்ளிகளாக காட்சியளிக்கின்றன.
நகருக்கு வெளியிலுள்ள பகுதிகளில் குறைவான வெளிச்சமே உள்ளது. இதேபோல இந்த நகரின் மத்தியில் ஓடும், தேம்ஸ் பளிச் விளக்குகளினூடே இருளில் மூழ்கியிருப்பதாலேயே தெளிவாக தெரிகின்றது.
இந்தப் புகைப்படம், சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விண்வெளி வீரர் க்ஜெல் லிண்ட்க்ரென் என்பவரால் எடுக்கப்பட்டது.