செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐரோப்பிய யூனியன் – துருக்கி இடையே ஒப்பந்தம்ஐரோப்பிய யூனியன் – துருக்கி இடையே ஒப்பந்தம்

ஐரோப்பிய யூனியன் – துருக்கி இடையே ஒப்பந்தம்ஐரோப்பிய யூனியன் – துருக்கி இடையே ஒப்பந்தம்

1 minutes read

போரால் பாதிக்கப்பட்ட சிரியாவிலிருந்து ஐரோப்பா நோக்கி அகதிகள் வருவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஐரோப்பிய யூனியன் அமைப்புக்கும், துருக்கி நாட்டுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தானது.
இதுதொடர்பாக பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ùஸல்ஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
துருக்கியில் புதிய அகதிகள் மையம் அமைப்பதற்காக 300 கோடி யூரோ (சுமார் ரூ.21,200 கோடி) நிதியுதவி அளிக்க அந்த ஒப்பந்தத்தில் ஐரோப்பிய யூனியன் ஒப்புக்கொண்டது.
இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்டு டஸ்க் கூறியதாவது: அகதிகள் பிரச்னை குறித்த எங்களது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. துருக்கி வழியாக ஐரோப்பாவுக்குள் அபரிமிதமான எண்ணிக்கையில் அகதிகள் வருவதைக் கட்டுப்படுவதற்கான செயல்திட்டத்தை இரு தரப்பினரும் உருவாக்கியுள்ளோம்.
சிரியாவிலிருந்து துருக்கி வரும் அகதிகளைத் தங்க வைத்து பராமரிப்பதற்காக, துருக்கி நாட்டுக்கு 300 கோடி யூரோ நிதியுதவி அளிக்க ஒப்புதல் ஏற்பட்டுள்ளது. அகதிகள் விவகாரத்தில் துருக்கி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஐரோப்பிய யூனியன் மாதம் ஒருமுறை ஆய்வு செய்யும் என்றார் அவர்.
துருக்கி பிரதமர் அகமது தவுதோக்லு கூறியதாவது:
சிரியாவில் என்ன நடக்கும் என்பதை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. எனினும், ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை செயல்படுத்த எங்களால் முடிந்ததைச் செய்வோம். ஐரோப்பிய யூனியன் அளிக்கும் 300 கோடி யூரோ முழுவதும் அகதிகளுக்காகவே செலவிடப்படும் என்றார் அவர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.