நிதி மந்திரி மீது சோடா வீசியெறியப்பட்டுள்ள சம்பவம் பின்லாந்து நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெம்பர் என்ற இடத்தில் உள்ள காபி அருந்தகத்திற்கு நேற்று வருகை தந்திருந்த பின்லாந்து நிதி மந்திரி அலெக்சாண்டர் ஸ்டெப் மீது அந்த அருந்தகத்தில் இருந்த ஒருவர் “பொய் பேசுபவனே” என்று கத்தியபடி குடிக்கும் சோடாவை முகத்தில் வீசியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போலீசால் கைது செய்யப்பட்ட அந்த நபர் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் தொழிலாளர்கள் நலன் சார்ந்த விஷயத்தில் கை வைத்து நாட்டில் உள்ள தொழிலாளர்களின் வெறுப்பை சம்பாதித்த ஸ்டெப், அதை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.