செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் “டைம்’ ஆங்கிலப் பத்திரிகை தேர்வு | சிறந்த மனிதர் ஏஞ்சலா மெர்க்கல் “டைம்’ ஆங்கிலப் பத்திரிகை தேர்வு | சிறந்த மனிதர் ஏஞ்சலா மெர்க்கல்

“டைம்’ ஆங்கிலப் பத்திரிகை தேர்வு | சிறந்த மனிதர் ஏஞ்சலா மெர்க்கல் “டைம்’ ஆங்கிலப் பத்திரிகை தேர்வு | சிறந்த மனிதர் ஏஞ்சலா மெர்க்கல்

0 minutes read

நிகழாண்டின் சிறந்த மனிதராக, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் “டைம்’ ஆங்கிலப் பத்திரிகை தேர்வு செய்துள்ளது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு பின், இந்த கௌரவத்தை பெறும் முதல் பெண் என்ற பெருமை மெர்க்கலாவுக்கு கிடைத்துள்ளது.
கடந்த 1986-ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக பிலிப்பின்ஸின் முதல் பெண் அதிபர் கோராஸன் அகினோவை, “டைம்’ பத்திரிகை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. 61 வயதாகும் ஏஞ்சலா, ஈரான் அதிபர் ஹஸன் ரோஹானி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட உலகின் பிரபலமான தலைவர்களையும், அரசியல்வாதிகளையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார். உக்ரைன் பிரச்னை, சிரியா அகதிகள் விவகாரம் உள்ளிட்டவற்றில் ஏஞ்சலாவின் செயல்பாடுகள், அவரது தலைமைப்பண்பு ஆகியவற்றுக்காக அவரை சிறந்த மனிதராக தேர்வு செய்ததாக “டைம்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.