ஆண்டுக்கு 400 மில்லியன் பேரை கடுமையாக பாதித்து, பலரின் உயிரை குடித்த டெங்கு காய்ச்சலுக்கு முதல் முறையாக மெக்சிகோவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது தான் கடந்த 100 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகப் பெரிய கண்டுபிடிப்பு எனவும், இது சுகாதாரத்துறை வரலாற்றிலேயே மிகப் பெரிய நிகழ்வு எனவும் இந்த மருந்தை கண்டுபிடித்த நிறுவனத்தின் தலைவர் ஆலிவர் சார்மெயில் தெரிவித்துள்ளார். இந்த மருந்து பிரன்ஞ் மருந்து கம்பெனிக்கு மிகப் பெரிய வருமானத்தை ஈட்டித்தரப் போவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலுக்கான மருந்து 1.5 பில்லியன் யூரோவிற்கும் அதிகமான பொருட் செலவில் 20 ஆண்டுகள் செலவிட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1