இலங்கையில் உள்நாட்டுச் சண்டை நடைபெற்ற பகுதிகளிலிருந்து 2 லட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக, தன்னார்வத் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் “ஹேலோ டிரஸ்ட்’ என்ற பிரிட்டன் தொண்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், அந்த அமைப்பின் தலைவர் டேமியன் ஓபிரையன் கூறியதாவது:
இலங்கையில், போர் காரணமாக மக்கள் வெளியேறிய 90 சதவீத குடியிருப்புப் பகுதிகளில் இருந்து கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.
அந்தப் பகுதிகளிலிருந்து இதுவரை 2 லட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.
இன்னும் வனப்பகுதிகள், வயல்வெளிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை.
வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் இலங்கையை கண்ணிவெடியில்லா நாடாக்குவதே எங்கள் இலக்கு என்றார் அவர்.
3