செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 90-வது திருமண நாள் கொண்டாடிய இந்திய தம்பதி90-வது திருமண நாள் கொண்டாடிய இந்திய தம்பதி

90-வது திருமண நாள் கொண்டாடிய இந்திய தம்பதி90-வது திருமண நாள் கொண்டாடிய இந்திய தம்பதி

1 minutes read

இங்கிலாந்து நாட்டில் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் பிராட்போர்டு என்ற இடத்தில் வசிப்பவர்கள் கரம் சந்த் (வயது 110), கர்ட்டாரி (103) தம்பதியர். இந்தியாவை சேர்ந்த இவர்கள், ஆங்கிலேயர் ஆட்சியின்போது, 1925-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி பஞ்சாபில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். 40 ஆண்டுகள் கழித்து அவர்கள் இங்கிலாந்து சென்று குடியேறினர்.

இந்த தம்பதியர் தங்களது 90-வது திருமண நாளை நேற்று முன்தினம் மகிழ்ச்சிகரமாக கொண்டாடினர்.

இவர்களுக்கு 8 குழந்தைகள், 27 பேரக்குழந்தைகள், 23 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர்.

இந்த நீடித்த மணவாழ்வு குறித்து கரம் சந்த் கூறும்போது, “திருமணம் என்பதே ஆணும், பெண்ணும் சமரசம் செய்து கொண்டு வாழ்வதுதான். எனது பெற்றோர் அத்தகைய ஒரு மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கையைத்தான் நடத்தினார்கள். அவர்கள் சண்டையிட்டு நான் பார்த்ததே இல்லை. அவர்கள் ஒருவருடன் ஒருவர் கோபித்துக்கொண்டதும் கிடையாது. என் பெற்றோர்தான் எங்களுக்கு முன்னோடி” என்றார்.

கரம் சந்த் ஓய்வு பெற்ற மில் தொழிலாளி. தினமும் ஒரு சிகரெட் புகைப்பதையும், சிறிதளவு விஸ்கி குடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “எதையும் குடிக்கலாம். சாப்பிடலாம். ஆனால் மிதமாக” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.