செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சுவிஸ் வங்கிகளில் கோரப்படாத 2,600 பேரின் கணக்கு விவரங்களை அரசு வெளியிட்டதுசுவிஸ் வங்கிகளில் கோரப்படாத 2,600 பேரின் கணக்கு விவரங்களை அரசு வெளியிட்டது

சுவிஸ் வங்கிகளில் கோரப்படாத 2,600 பேரின் கணக்கு விவரங்களை அரசு வெளியிட்டதுசுவிஸ் வங்கிகளில் கோரப்படாத 2,600 பேரின் கணக்கு விவரங்களை அரசு வெளியிட்டது

1 minutes read

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் கோரப்படாத 2,600 பேரின் வங்கிக் கணக்கு விவரங்களை அந்நாட்டு அரசு புதன்கிழமை வெளியிட்டது.
அந்தப் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இதுதவிர, 80 பாதுகாப்புப் பெட்டக கணக்கு விவரங்களையும் சுவிஸ் அரசு வெளியிட்டுள்ளது.
2,600 பேரின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ.300 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், 4 இந்தியர்களின் வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்று தெரிவிக்கப்படவில்லை.
4 இந்தியர்களில், இருவரின் வீடுகள் இந்தியாவில் இருப்பதாகவும், ஒருவர் பிரான்ஸில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருவரின் விவரம் தெரிவிக்கப்படவில்லை.
மும்பையைச் சேர்ந்த பியரி வசேக், டேராடூனைச் சேர்ந்த பஹதூர் சந்திர சிங், பாரீஸில் வசிக்கும் டாக்டர் மோகன்லால் ஆகியோரும், கிஷோர் லால் என்பவரும் அந்த இந்தியர்கள் ஆவர்.
சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள பட்டியலில், பெரும்பாலானவர்கள் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களைத் தவிர, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, துருக்கி, ஆஸ்திரியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும்உள்ளனர்.
அந்தப் பட்டியலில் இருப்பவர்களின் குடும்பத்தினர், வாரிசுகள் தங்களது விவரங்களை 5 ஆண்டுகளுக்குள் தெரிவித்து, இந்தக் கணக்குகளுக்கு உரிமை கோரலாம் என்று சுவிஸ் வங்கியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.