செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 2015ஆம் ஆண்டுக்கான பட்டியலிலே சிறிலங்கா 91ஆவது இடத்தில் | தொழில் செய்ய சிறந்த நாடு 2015ஆம் ஆண்டுக்கான பட்டியலிலே சிறிலங்கா 91ஆவது இடத்தில் | தொழில் செய்ய சிறந்த நாடு

2015ஆம் ஆண்டுக்கான பட்டியலிலே சிறிலங்கா 91ஆவது இடத்தில் | தொழில் செய்ய சிறந்த நாடு 2015ஆம் ஆண்டுக்கான பட்டியலிலே சிறிலங்கா 91ஆவது இடத்தில் | தொழில் செய்ய சிறந்த நாடு

1 minutes read

தொழில் செய்வதற்குச் சிறந்த நாடுகளின் பட்டியலில், சிறிலங்கா 91ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ்  வெளியிட்டுள்ள 2015ஆம் ஆண்டுக்கான பட்டியலிலேயே சிறிலங்கா 91ஆவது இடத்தில் உள்ளது.

வர்த்தகம், நிதி சுதந்திரம் மற்றும் ஊழல், வன்முறை போன்ற சவால்களை எதிர்கொள்வதில் சிறிலங்கா மோசமான நிலையில் இருப்பதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

மொத்தம் 144 நாடுகள் இந்தப் பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் டென்மார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகின் நிதி தலைநகராக விளங்கும் அமெரிக்கா கடந்த ஆண்டைவிட 4 இடங்கள் பின்தங்கி தற்போது 22ஆவது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து, ஜப்பான் நாடுகள் தலா 3 இடங்கள் அதிகரித்து தற்போது முறையே 10 மற்றும் 23ஆவது இடத்தில் உள்ளன.

ஜெர்மனி 2 இடங்கள் முன்னேறி 18ஆவது இடத்திலும், சீனா 97இல் இருந்து முன்னேறி 94ஆவது இடத்திலும் உள்ளன. இந்தியா 97 ஆவது  இடத்தில் உள்ளது.

அதேவேளை, பாகிஸ்தான் 103ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 121 ஆவது இடத்திலும் உள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.