1
அமெரிக்காவின் லாஸ் வேகஸ் பகுதியில் நேற்று 65வது உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 2015-ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை 24 வயதான, பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகி பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச் தட்டிச் சென்றார்.
நேற்று நடந்த இறுதி அலங்கார அணிவகுப்பில் உலக அழகிக்கான மகுடம் அவருக்கு சூட்டப்பட்டது. 2014-ம் ஆண்டிற்கான உலக அழகியான கொலம்பியா நாட்டின் அழகி பவுலினா வேகா, புதிய உலக அழகி பியா அலோன்ஜோவுக்கு இந்த மகுடத்தை சூட்டினார்.