செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 7000 பணியிடங்களை மூடப்போவதாக டோஷிபா அறிவிப்பு | ஜப்பான் 7000 பணியிடங்களை மூடப்போவதாக டோஷிபா அறிவிப்பு | ஜப்பான்

7000 பணியிடங்களை மூடப்போவதாக டோஷிபா அறிவிப்பு | ஜப்பான் 7000 பணியிடங்களை மூடப்போவதாக டோஷிபா அறிவிப்பு | ஜப்பான்

0 minutes read

ஜப்பானைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான டோஷிபா நிறுவனத்தின் இந்த நிதியாண்டுக்கான நஷ்டம் 4.5 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இருக்கும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 7000 பணியிடங்களை மூடப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், டிவிடி பிளேயர்கள் தொடங்கி அணுசக்தி மூலம் மின்சாரம் என பல்வேறு துறைகளில் வர்த்தகம் செய்து வரும் டோஷிபா, இந்த பணி இழப்புகள் பெரும்பாலும் தனது நுகர்வோர் எலக்ட்ரானிக் பொருட்கள் துறையிலே பெரிய அளவுக்கு இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளாக தமது லாபத்தை கூட்டி அறிவித்ததாக இந்த ஆண்டின் முற்பகுதியில் டோஷிபா ஒப்புக்கொண்ட நிலையில், இந்த நிர்வாக சீரமைப்பு முன்னெடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டோஷிபா இதை தெரிவித்த நிலையில், அதன் பங்குகளின் விலை சந்தையில் சுமார் 40 சதவீத அளவுக்கு வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.