செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 66 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு நாட்டு அதிபர்கள் சந்திப்பு 66 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு நாட்டு அதிபர்கள் சந்திப்பு

66 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு நாட்டு அதிபர்கள் சந்திப்பு 66 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு நாட்டு அதிபர்கள் சந்திப்பு

0 minutes read

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு நாட்டு அதிபர்கள் சந்திப்பையடுத்து சீனா தைவான் இடையே நேரடியான ஹாட்லைன் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டது.

சீனாவில் உள்நாட்டுப் போர் கடந்த 1949-ஆம் ஆண்டு முடிவடைந்ததிலிருந்து சீனா – தைவான் தலைவர்களிடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருந்த நிலையில், ஏறத்தாழ 66 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், தைவான் அதிபர் மா யிங்-ஜியோவும் கடந்த நவம்பர் மாதம் நேரில் சந்தித்துப் பேசினர்.

இந்நிலையில், இந்த சந்திப்பின் போது சீன அதிபர் ஒப்புதல் அளித்தபடி, சீனா தைவான் நாட்டு உயர் அதிகாரிகளுக்கு இடையேயான ஹாட்லைன் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நடைமுறையில் தைவான் தனி நாடாக இருந்தாலும், அதனைத் தங்களது ஒருங்கிணைந்த பகுதியாக இப்போதும் சீனா கருதி வருவது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.