விமானத்தில் பணிப்பெண்ணை தாக்கியதாக கனடாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பஞ்சாப் மாநிலத்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டொரொடோ பெர்சன் சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட்ட விமானம் மீண்டும் அதே விமான நிலையத்திற்கு திரும்பியது. 47 வயதுமிக்க ஜாஸ்கரன் சித்து என்பவரை போலீசார் கைது செய்தனர். கனடாவின் அல்பெர்டா பக்குதியில் வசித்து வரும் சித்து, விமானத்தின் பணிப்பெண் ஒருவரை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக, குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இது குறித்து கனடா போலீசார் கூறுகையில், ”கனடாவில் இருந்து புதுடெல்லிக்கு புறப்பட்ட விமானமானது டிசம்பர் 30-ம் தேதி 12.42 மணியளவில் மீண்டும் கனடாவின் பெர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. விமானத்தில் இருந்த ஒரு பயணி ஒருவர், விமான பணிப்பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.