கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டங்களை அடுத்து, லண்டன் நகரையே புதிய வெளிச்சத்தில் காட்டும் லூமியர் திருவிழாவைக் கொண்டாட இங்கிலாந்து மக்கள் காத்திருக்கின்றனர்.
Artichoke என்ற கலை அமைப்பு லண்டன் நகர மேயருடன் இணைந்து 2.5 மில்லியன் பவுண்டில் இந்த திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. சர்வதேசக் கலைஞர்கள் பலர் பங்கேற்கவுள்ள இந்த திருவிழாவில் 3-டி உட்பட பல நவீன புரொஜெக்டிங் தொழில்நுட்பங்களைக் கொண்டு லண்டன் நகரையே வெளிச்சத்தில் திணறடிக்க முடிவு செய்துள்ளனர்.
ஜனவரி 14 முதல் 17 வரை நடைபெறவுள்ள இந்த திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. லூமியர் திருவிழா குறித்த மேலதிக விவரங்கள்…http://www.visitlondon.com/lumiere என்ற பிரத்தியேக இணையதளத்தில்.