பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவில் வழங்கப்படும், ‘மக்களின் மனம் கவர்ந்த நடிகை’ என்ற விருதை வென்றுள்ளார். இதன்மூலம், இவ்விருதை பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமை, அவருக்கு கிடைத்துள்ளது.
அமெரிக்காவின், ‘ஏபிசி’ என்ற, ‘டிவி’ சேனலில் ஒளிபரப்பாகும், ‘குவாண்டிகோ’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். இதில், பிரியங்கா சோப்ரா, புலனாய்வு நிறுவன அதிகாரியாக நடித்துள்ளார். இந்த தொடருக்கு, அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இதில், சிறந்த அறிமுக நடிகை விருதுக்கு, பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு ‘பீயுப்பிள் சாய்ஸ்’ எனப்படும், மக்களின் மனம் கவர்ந்த நடிகர், நடிகை என்ற விருது வழங்கப்பட்டது. எம்மா ராபர்ட்ஸ், ஜெமி லீ குருடிஸ், லியா மிக்கெல் போன்ற நடிகையரின் கடும் போட்டியையும் மிஞ்சி, அதிக ஓட்டு வித்தியாசத்தில், பிரியங்கா சோப்ரா வெற்றி பெற்றுள்ளார்.