நேற்று காலை தொடங்கிய சீன பங்குச்சந்தைகளில் அதன் பங்குகள் 7 சதவீதத்திற்கும் கீழ் பெருமளவில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக சீன பங்குச்சந்தையில் வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது சீனாவில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன்காரணமாக அந்நாட்டு பங்குச்சந்தைகள் இந்தவாரம் துவங்கியதில் இருந்தே கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இன்றைய வர்த்தகம் துவங்கிய அரைமணி நேரத்தில் பங்குகள் 7 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவை சந்தித்தன. இதனால் அந்நாட்டு பங்குச்சந்தைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.