அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலம் ஒர்லாண்டா நகரில் பல்ஸ் என்ற பெயரில் இரவு விடுதி ஒன்று உள்ளது. இது ஒரினச்சேர்க்கையாளர் களுக்கு பிரத்யேகமான விடுதியாக செயல்பட்டு வந்தது. அமெரிக்க நேரடிப்படி நேற்று அதிகாலை 2 மணிய ளவில் அங்கு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டி ருந்தன. அப்போது திடீ ரென துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம மனிதன் அங்கு இருந் தவர்களை நோக்கி சர மாரியாக சுட்டான். எந்திர துப்பாக்கி மற்றும் கைத்துப் பாக்கியால் தொடர்ந்து சுட்டப்படி இருந்தான். மர்ம மனிதன் சுட்டதில் 50 பேர் உயிரிழந்தனர். 53 பேர் படுகாயம் அடைந்த னர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
ஐ.எஸ். இயக்கத்தின் செய்திகளை வெளியிடும் அமாக் என்ற அரபு செய்தி நிறுவனம் இது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் என்று குறிப்பிட்டுளளது.அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்காவில் உள்ள ஒர்லாண்டா இரவு விடுதியில் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவன் தாக்குதல் நடத்தி 100 பேரை கொன்றுள்ளான் அல்லது காயப்படுத்தியுள்ளான் என்று கூறப்பட்டுள்ளது.ஐ.எஸ். இயக்க செய்திகளை அதிகாரப் பூர்வமாக வெளியிடும் செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ள தால் இது ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல் தான் என்று தெரிகிறது.
துப்பாக்கியால் சுட்ட மர்ம மனிதன் யார் என்பது உடனடியாக தெரியவந்தது. அவர் நியூயார்க் அருகே உள்ள போர்ட்பியர்ஸ் நகரத்தை சேர்ந்த ஒமர் மைதீன் (வயது 29) என்று போலீசார் கண்டுபிடித்தனர். ஒமர்மைதீன் ஆப்கானிஸ் தான் வம்சாவளி பெற் றோருக்கு பிறந்தவன். அவரது தந்தையின் பெயர் மிர்சித்திக்.ஆரம்பத்தில் நியூயார்க் நகரில் இவர்கள் வசித்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு போர்ட்பியர்ஸ் நகருக்கு குடிபெயர்ந்தனர்.
ஒமர்மைதீன் 2007-ம் ஆண்டிலிருந்து ஜி-4 செக்யூர் என்ற அமெரிக்காவின் புகழ்பெற்ற செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். அந்த நிறு வனத்தில் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தன் னுடைய கைத்துப்பாக்கி ஆகியவற்றை கொண்டு இந்த தாக்குதலை நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
இரவு 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடந்த இந்த சம்பவத்தில் 30 வயதான எட்டி ஜஸ்டிஸ் என்பவரும் பலியாகியுள்ளார்.
ஒமர் கிளப்புக்குள் நுழைந்தவுடன் கழிவறையில் தஞ்சம் அடைந்த எட்டி 2.06 மணிக்கு தனது தாய்க்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். அதில் மம்மி ஐ ல்வ் யூ, கிளப்பில் உள்ளேன், துப்பாக்கிச்சூடு நடக்கிறது என்று அதில் தெரிவித்துள்ளார்.
“Mommy I love you,” the first message said. It was 2:06 am.
“In club they shooting.”
அரை தூக்கத்தில் இருந்த அவரின் தாய் மினா ஜஸ்டிஸ், நீ பத்திரமாக இருக்கிறாயா என்று எஸ்.எம்.எஸ். மூலம் கேட்டுள்ளார்.
“U ok”
எட்டி கழிவறையில் உள்ளேன்.
At 2:07 am, he wrote: “Trapp in bathroom.
“Pulse. Downtown. Call police.”
Then at 2:08: “I’m gonna die.”
தயவு செய்து போலீசாருக்கு தகவல் அளியுங்கள். அந்த நபர் துப்பாக்கியுடன் கழிவறைக்குள் வந்துவிட்டார்.அவன் வந்து விட்டான் நான் சாகப் போகிறேன் என்று பதில் அனுப்பியுள்ளார். அந்த நபர் டெரராக உள்ளார். போலீசாரை வந்து எங்களை மீட்கச் சொல்லுங்கள் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார் எட்டி. மினா போலீசாருக்கு தகவல் அளித்தார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானவர்கள் பட்டியலில் எட்டியின் பெயரும் இருந்ததை பார்த்து மினா அதிர்ச்சி அடைந்தார்.