செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 230-க்கும் மேற்பட்டோர் படுகாயம் பலியானோர் எண்ணிக்கை 80 | ஆப்கானிஸ்தானில் கண்டன ஆர்ப்பாட்டம்230-க்கும் மேற்பட்டோர் படுகாயம் பலியானோர் எண்ணிக்கை 80 | ஆப்கானிஸ்தானில் கண்டன ஆர்ப்பாட்டம்

230-க்கும் மேற்பட்டோர் படுகாயம் பலியானோர் எண்ணிக்கை 80 | ஆப்கானிஸ்தானில் கண்டன ஆர்ப்பாட்டம்230-க்கும் மேற்பட்டோர் படுகாயம் பலியானோர் எண்ணிக்கை 80 | ஆப்கானிஸ்தானில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 minutes read

ஆப்கானிஸ்தானில் ‘ஷியா ஹசாரா’ சிறுபான்மை இன மக்கள் வாழ்கிற பகுதியில் மின்வழி பாதையை அமைக்காமல், புறவழியில் அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு மின் இணைப்பு கிடைக்காது என்பதால், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக அந்த இனத்தவர், தலைநகர் காபூலில் தெஹ் மசாங் சதுக்கத்தில் நேற்று ஆயிரக்கணக்கில் கூடினர்.

அப்போது கூட்டத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகள், சக்தி வாய்ந்த குண்டை வெடிக்க செய்தனர். இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக கூட்டத்தினர் நாலாபக்கமும் சிதறி ஓடினர்.

தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. 230-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ். இயக்கத்தினர் பொறுப்பேற்றனர்.

அமைதி வழியில் போராட்டம் நடத்திய மக்களை கொன்று குவித்ததற்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.