7
இலங்கையர்கள் உள்ளிட்ட 558 சட்டவிரோத குடியேற்றவாசிகள் ஐரோப்பாவைக்குள் நுழைய முற்பட்ட போது துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அனடொலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவர்கள் நேற்று முன்தினம் துருக்கியின் மேற்குப் பகுதியில் உள்ள எடிரின் மாகாணத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளில் சிறிலங்கா, பாகிஸ்தான், பங்களாதேஸ், துனிசியா, ஈரான், ஈராக், பலஸ்தீனம், எகிப்து,சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
