செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை நீடிப்பது அா்த்தமற்றது: வைகோ

விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை நீடிப்பது அா்த்தமற்றது: வைகோ

1 minutes read

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடிப்பது அா்த்தமற்றதென ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளாா். முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை அடுத்து விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு கடந்த 1991இல் மத்திய அரசு தடை விதித்தது.

அத்துடன் தடைக்காலம் முடிவடையும் நேரத்தில் தடை நீடிப்பு தொடா்பாக கருத்துக்கேட்புக் கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையிலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தடை நீடிப்பு தொடா்பாக, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு தீா்ப்பாயம் சாா்பில் கருத்துக் கேட்பு கூட்டம் மதுரையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியது.

அரசு விருந்தினா் மாளிகையில் 4 நாட்கள் நடைபெறும் விசாரணைக்கு புதுடெல்லி உயா்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா சாகல் தலைமை வகிக்கிறாா்.

தீா்ப்பாய முதல் அமா்வில் வைகோ பங்கேற்றாா். விசாரணை முடிவடைந்ததை அடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வைகோ மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தொடா்ந்து தடை நீடிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வாதிடுவதற்காக விசாரணையில் நான் பங்கேற்றுள்ளேன்.

எனது கருத்தை எடுத்து வைப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி உறுதியளித்துள்ளாா்.

தீா்ப்பாய விசாரணையில் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவா் உருத்திர குமாரன் சாா்பில் உச்ச நீதிமன்ற சட்டத்தரணி பாரிவேந்தனும்  முன்னிலையானார்.

விடுதலைப்புலிகள் மீதான தடையை தொடா்ந்து நீடிக்கவே மத்திய அரசு விரும்புகிறது. அதனால்தான் தடைக்காலம் இரண்டு ஆண்டுகள் என்று இருந்ததை 5 ஆண்டுகள் என்று அரசு மாற்றியது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை அா்த்தமற்றது. எனவே தடையை நீக்க வேண்டும் என்று வாதிடுகிறோம்.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் செய்யாத தவறுக்காக 7 தமிழா்கள் கடந்த 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அவா்களை விடுவிக்க மறுப்பது மனிதாபிமானமற்ற செயல். எனவே 7 தமிழா்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதற்கேற்றவாறு மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும்” என்றாா்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.