வீடு தேடி வரும் மருத்துவசேவை; பாராட்டை அள்ளும் சுகாதார திணைக்களம்

தற்போதைய கொரோனா நெருக்கடிக் காலத்தில், தொற்றா நோயாளிகளின் பருவ கால மருத்துசேவையை வீடு தேடிச் சென்று வழங்க இலங்கை சுகாதாரண திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா அபாயம் காரணமாக மாதாந்த கிளினிக் நோயாளிகளுக்கு அவர்களுக்கான மருந்துகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தல் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை,பணிப்பாளர்  விடுத்துள்ள அறிவித்தல் இதோ!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிளினிக் நோயாளர்களுக்கான அவசர அறிவிப்பு!
**************************************
கொரோனா வைரஸ் தாக்கத்தின் அவசர நிலையினை கருத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மாதாந்த கிளினிக் பெறுபவர்களுக்கான மருந்துகளை சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை,பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

எமது வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சை பெறுவோர் காலை 09.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணிவரை 021 2203037 இலக்கத்துடன் தொடர்புகொண்டு கீழே கோரப்பட்ட தங்கள் விபரங்களை தெரிவித்து தங்களுக்குரிய மருந்துகளை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளுமாறு அவர் அறிவித்துள்ளார்.

கோரப்படும் தகவல்கள் :-

1- முழுப்பெயர்
2- தபால் முகவரி
3- வயது
4- பால்
5- கலந்துகொள்ளும் கிளினிக்
6- கிளினிக் இலக்கம் (கிளினிக்கொப்பியில் எழுதப்பட்டிருக்கும்)
7- தொலைபேசி இலக்கம்

ஆசிரியர்