ஊடகவியலாளர்கள் கலைஞர்களுக்கான நிவாரண கொடுப்பனவுகள்!

ஸ்ரீலங்காவிலும் கொரோனா தொற்று அதிகரித்து மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்காக தற்போது 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் குடும்பங்களுக்கு மேலதிகமாக மேலும் 10 லட்சம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா வீதம் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் ஊடகவியலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் இந்த நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க அமைச்சரவையில் ஆராயப்படுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விடயங்களை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான பொருளாதார மேம்பாட்டு செயலணி மேற்கொள்கின்றது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அங்க ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்