செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனா வைரஸ்க்கு ஏற்ற மருந்தல்ல!!

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனா வைரஸ்க்கு ஏற்ற மருந்தல்ல!!

0 minutes read

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினால் பயனில்லை என ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையின் தொற்று நோய் பிரிவு மருத்துவர் பால் ஆஃபிட் எழுதியுள்ள கட்டுரையில், கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் பக்கவிளைவுகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதயம் முழுவதும் நச்சுத்தன்மையுடன் காணப்பட்டதாகவும் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

தனது ஆய்வில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுத்த நோயாளிகளில் 2 புள்ளி 8 விழுக்காடு பேர் இறந்தனர் என்றும் அதை எடுத்துக் கொள்ளாத நோயாளிகளில் 4 புள்ளி 6 விழுக்காடு பேர் இறந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக மேற்கூறிய மருந்து ஓரளவுக்குத்தான் பலனளிக்குமே தவிர முழுமையாக நம்ப இயலாது என்று பால் ஆஃபிட் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.