ஒரு கோடியே 20 லட்சம் மக்களுக்கு சிகிச்சையளிக்க நான்கு வென்டிலேட்டர் கொண்ட நாடு..!

கொரோனா பரவிய நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு சுவாசக் கருவிகளை வாங்கப் பல நாடுகள் முயலும்போது, தென் சூடானில் நான்கு வென்டிலேட்டர்களே உள்ளன. கொரோனா வைரஸின் தொற்றால் நுரையீரலில் சளியடைப்பு ஏற்பட்டவர்களுக்கு ஒக்சிஜனைச் செலுத்த வென்டிலேட்டர் எனப்படும் சுவாசக் கருவிகள் உதவுகின்றன.

அதனால் வென்டிலேட்டர்களைத் தயாரிக்கவும், வெளிநாடுகளிலிருந்து வாங்கவும் பாதிக்கப்பட்ட உலகிலுள்ள அனைத்து நாடுகளும் முயன்று வருகின்றன. அதேநேரத்தில் ஒரு கோடியே 20 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட தென் சூடானில் 24 தீவிரச் சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும், நான்கு வென்டிலேட்டரும் மாத்திரமே உள்ளன. 2 கோடியே 10 லட்சம் மக்கள் தொகையைக் கொன்ட புர்க்கினா பாசோ நாட்டில் 11 வென்டிலேட்டரும், 80 லட்சம் மக்கள் தொகையைக் கொன்ட சியரா லியோனில் நாட்டில் 13 வென்டிலேட்டரும், 50 லட்சம் மக்கள் தொகையைக் கொன்ட மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் 3 வென்டிலேட்டரும் உள்ளன.

3 கோடியே 20 லட்சம் மக்களைக் தொகையை கொண்ட வெனிசுலாவில் 84 தீவிரச் சிகிச்சைப் பிரிவு படுக்கைகளே உள்ளன. வெனிசுலாவிலுள்ள 90% வைத்தியசாலைகளில் போதியளவு மருந்துகளும் இல்லை என அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

-வணக்கம் லண்டனுக்காக ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

ஆசிரியர்