முகக் கவசம் அணிவது தொடர்பில் வெளியான புதிய தகவல்!

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைவடைந்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்திய பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமைக்கமைய தனியார் வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு முக கவசம் அணிவது அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உடற்பயிற்சி பாதைகளில் நடக்கும் போதும் முக கவசம் அணிவது அவசியமில்லை. எனினும் பொது போக்குவரத்தில் பயணிப்பவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போதைய நிலைமைக்கமைய எந்த பிரதேசத்திலும் தன்சல் ஏற்பாடு செய்வதற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

#Covid-19 #Corona Virus #People #கொரோனா #கோவிட் 19 #முகக்கவசம்

ஆசிரியர்