செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 2 நாட்களுக்குப் பின்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

2 நாட்களுக்குப் பின்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

1 minutes read

இலங்கையில் கடந்த 2 நாட்களுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1,951 ஆக அதிகரித்துள்ளது.

மாலைதீவிலிருந்து வந்த ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 28 பேர் குணமடைந்த நிலையில், நாட்டில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,526 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 1,951 பேரில் தற்போது 414 நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 31 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கொடிய வைரஸ் காரணமாக நாட்டில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.