அமெரிக்காவின் புளோரிடாவில் ஸ்குயிட் மீன்கள்!

ஜப்பானில் மின் மினிப்பூச்சிகளை போல ஒளிரும் ஸ்குயிட் எனும் (ஊசி கணவாய்) மீன் இனம் கரைக்கு வந்து ஒளியை வெளிவிடுகின்றன. இவை 1,200 அடி ஆழத்தில் வசிக்கக்கூடியவை.குறிப்பிட்ட சில காலம் மட்டும் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு, கரை ஒதுங்குகின்றன. மின்மினியைப் போலவே இந்தக் கணவாய் மீன்களின் உடலும் ஒளியை உமிழ்கின்றன. எதிரிகளிடமிருந்து தப்பிக்க, இணையை அழைக்க, இரையை அருகில் வரச் செய்ய என்று பலவிதங்களில் ஒளியைப் பயன்படுத்திக்கொள்கின்றன இந்த மின்மினிக் கணவாய்கள்.
பல லட்சக்கணக்கான கணவாய்கள் கரை ஒதுங்கி, இனப்பெருக்கம் செய்து, முட்டைகளை இட்டுச் செல்கின்றன. அதை போலவே ஒரு வகை இன்று அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் அருகே தீவு ஒன்றில் ஜொலி ஜொலிக்கும் வகையில் நிறம் மாறும் ஸ்குயிட் மீன் வகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.யூசெப்பா தீவில் தங்கிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் ,இதை படம் பிடித்து வெளியிட இணையத்தில் வைரலாகி உள்ளது.

தீவில் முந்தைய நாள் இரவில் கனமழை பெய்ததால், காலையில் தங்கள் படகின் நிலையை காண சென்ற போது ஸ்குயிட் மீன் கரையோரம் கிடந்ததாகவும் அதை மீட்டு கடலில் விட எடுத்தப்போது ஜொலிக்க ஆரம்பித்ததாகவும் சுற்றுலாப் பயணி தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்