Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் ‘நடிகைகளுக்கு கோவில் கட்டுவதில் உடன்பாடு இல்லை’ | நடிகை வாணிபோஜன் பேட்டி

‘நடிகைகளுக்கு கோவில் கட்டுவதில் உடன்பாடு இல்லை’ | நடிகை வாணிபோஜன் பேட்டி

1 minutes read

வாணிபோஜன் தினமும் உடற்பயிற்சி செய்வதில் ஈடுபாடு கொண்டவர். சென்னையில் ஒரு உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு வாணிபோஜன் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: ஓடிடியில் படங்கள் வெளியிடுவது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: எங்களைப் போன்று புதிதாக வரும் நடிகர்-நடிகைகளுக்கு ஓடிடி தளம் சாதகமாக இருக்கிறது. தியேட்டர்களுக்கு மாற்றாக ஓடிடி அமைந்திருக்கிறது. ஆனாலும் தியேட்டர்களுக்குப் போய் படம் பார்ப்பது, ஒரு தனி அனுபவம்.

கேள்வி: வெப் தொடர்கள் தயாரிக்கப்படுவது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்: வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள். எங்களுக்கு மகிழ்ச்சிதான். நிறைய புதுமுகங்கள் வருவதற்கு வெப் தொடர்கள் வாய்ப்பு அளிக்கின்றன.

கேள்வி: நடிகைகளுக்கு கோவில் கட்டுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: அதில் எனக்கு உடன்பாடு இல்லை. தெய்வங்களுக்குத்தான் கோவில் கட்ட வேண்டும். நாங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கிறோம். எங்களுக்கு கோவில் கட்ட தேவையில்லை. இவ்வாறு வாணிபோஜன் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More