September 22, 2023 2:36 am

தேர்தல் ஆணைக்குழுவின் இவ்வாண்டிற்கான மேலதிக நேர கொடுப்பனவிற்கு மாத்திரம் 6 கோடி ரூபா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நாட்டில் தேர்தலொன்று நடத்தப்படாதபோதிலும், தேர்தல் ஆணைக்குழுவின் இந்தாண்டின் இதுவரையான காலப்பகுதிக்கான மேலதிக நேர கொடுப்பனவிற்காக மாத்திரம் 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தொகையை தேர்தல் ஆணைக்குழு மத்திய வங்கியிடமிருந்து கேட்டுக்கொண்டுள்ளதாக சிங்கள நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நிதி அமைச்சின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ள ஆவணங்களில் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலதிக நேர கொடுப்பனவு, வேலைகளை செய்வதற்காக ஓய்வு பெற்றவர்களுக்கான கொடுப்பனவு, விடுமுறை நாள் கொடுப்பனவு மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட இவ்வாண்டு புனர் நிர்மானம் ஆகிவற்றுக்கான செலவுகள் எனக்குறிப்பிட்டு 9 கோடி ரூபாவை கேட்டுக்கொண்டுள்ளது.

2023 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பெறுவதற்கு  இந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், நிதி பற்றாக்குறை மற்றும் நிதி ஒதுக்கலுக்கான முன்னுரிமையை  கருத்திற்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளதால், அதற்கு ஏற்றவாறு நிதியை விடுவித்து கொடுப்பது கடினமான விடயமாகும் என நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் தேர்தலான்றுகூட  நடைபெறவில்லை, இருப்பினும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பெருந்தொகையான மேலதிக நேர கொடுப்பனவு செலுத்த வேண்டியுள்ளது. அப்படியிருக்க, தேர்தல் நடத்தப்பாட்டால்,  அதை விடவும் அதிகளவான தொகை  மேலதிக நேரத்திற்காக செலவிட நேரிடும் என அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்