செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரஞ்சனுக்கு எதிராகப் பிடியாணை!

ரஞ்சனுக்கு எதிராகப் பிடியாணை!

0 minutes read

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கண்டி மேலதிக நீதிவான் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு ஒன்றில் முன்னிலையாகாத காரணத்தால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெண்ணொருவரைத் திருமணம் செய்து கொள்வதாகத் தெரிவித்து 10 இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2010ஆம் ஆண்டு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அந்த வழக்குக்கு முன்னிலையாகாத காரணத்தால் ரஞ்சனுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.