செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வாகன விபத்தில் விஜயகலா உள்ளிட்ட நால்வர் காயம்!

வாகன விபத்தில் விஜயகலா உள்ளிட்ட நால்வர் காயம்!

0 minutes read

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.40 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த நால்வரும் பயணித்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த நால்வரும் புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.