ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி மக்காவிலும் மற்ற புனித இடங்களிலும் யாத்திரைக்குச் சென்றவர்களில் 206,582 பேர் காணாமல் போனதாக பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சவுதி அரேபிய சாரணர் இயக்கத்தின் பொதுச் சேவை முகாம்களில் இருந்து இந்தத் தரவுகள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், அங்க மீட்கப்பட்டவர்களில் 12,000க்கும் அதிகமானோர் தத்தம் நாடுகளின் ஹஜ் யாத்திரை அலுவலகங்களுக்குக் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வழிமாறிச் சென்றவர்களைக் கண்டுபிடிக்க சாரணர் இயக்கம், மக்காவிலும் மற்ற புனித இடங்களிலும் 3,732 மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.