வீட்டு வன்முறையாளர்கள் எங்கு செல்லலாம் என்பதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் “கட்டுப்பாட்டு எல்லைகளை” அறிமுகப்படுத்த முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் குற்றவாளிகள் செல்வதைத் தடுக்க தற்போது கட்டுப்பாட்டு எல்லைகள் உள்ளன.
புதிய திட்டத்தின் ஊடாக வீட்டு வன்முறையாளர்கள் எங்கு செல்லலாம் என்பதற்கான அதிக வரம்புகள் விதிக்கப்படும் என்பதுடன், வீட்டு வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் முன்னாள் வன்முறையாளரை மீண்டும் சந்திக்கும் அச்சமின்றி தங்கள் அன்றாட வாழ்க்கை முன்னெடுக்க உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாலியல் மற்றும் வன்முறை குற்றவாளிகள் சில இடங்களுக்குள் கட்டுப்படுத்தப்படுவதுடன், புதிய திட்டங்களின் கீழ் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படலாம். பின்னர் நிபந்தனைகளை மீறினால் அவர்கள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.
நன்னடத்தை அதிகாரிகள் விரிவான ஆபத்து மதிப்பீடுகளை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கான தடைசெய்யப்பட்ட இடங்களைத் தீர்மானிக்க பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.