கொழும்பு கல்வி அமைச்சில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் மொழித்தின விழாப் போட்டிகளில், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் சிரேஸ்ட மாணவத் தலைவி செல்வி அபிநயா றஜீபன் தேசிய ரீதியில்முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இலக்கிய விமர்சனம் (பிரிவு 4) போட்டியில் திறமையை வெளிப்படுத்தி இவர் இந்த முதலிடத்தைச் சுவீகரித்துள்ளார்.
இதன்மூலம் நடனம், இலக்கியம், பேச்சு ஆகிய பல்வேறு கலை மற்றும் இலக்கியத்துறைகளில் இவர் பெற்றுக்கொண்ட 10வது தேசிய விருது இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
மாணவியின் இச்சாதனையை பாடசாலைச் சமூகமும் பிரதேச மக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.