ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 டி-20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி, இம்முறை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத காரணத்தால், சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அடிலெய்டில் நடந்த இரு அணிகள் மோதிய முதல் டெஸ்டில், இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதுவரலாறு படைத்தது.
இதில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்ஸ் உலக சாதனையை சமன் செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 11 கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார்.
